மழைக்கால சீசன் ஆரம்பித்துவிட்டது. மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் சளி, இருமல், தும்மல் ஆகிய பிரச்சினைகள் வந்து விடும். அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதே தெரியாமல் இருக்கும். என்னதான் மாத்திரைகள், ஊசிகள் எடுத்துக் கொண்டாலும் மறுபடியும் அது வந்து கொண்டுதான் இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
பெரியவர்களைவிட சிறியவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரித்துவிடும். சிறு குழந்தைகள் நோயின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் திணறுவார்கள். அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கும். இவற்றிற்கு நாம் செய்ய வேண்டியவை ஒன்றே ஒன்றுதான்.நாம் குடிக்கும் தண்ணீரில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, வேறு எந்த ஒரு நோயும் அண்டாமல் இருக்க பாதுகாக்கின்றது.
தேவையான பொருட்கள்:
1. சீரகம்
2. மிளகு
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. அது இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
3. அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகை போட்டு கொதிக்க விடவும்.
4. 5 நிமிடம் கொதித்தால் போதும்.
5. கொதித்த பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டை வைத்து ஒரு மணி நேரம் அந்த பாத்திரத்தை மூடி வைக்கவும்.
6. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்தத் தண்ணீரின் நிறம் மாறி இருக்கும்.
7. இதனை வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த தண்ணீரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம். நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக இந்த தண்ணீரை குடித்து வரலாம். அப்படி நீங்கள் குடித்து வரும்பொழுது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி,அதேபோல் வெளியிலிருந்து எந்த ஒரு நோயும் தாக்காமல் நம்மை பாதுகாக்கும்.