தண்ணீரில் இதை கலந்து குடித்து உங்கள் உடலை சிக்கென்று மாற்றி கொள்ளுங்கள்!

Photo of author

By Kowsalya

எவ்வளவு தான் உடல் எடையை குறைக்க முயன்றாலும் குறைக்க முடியவில்லையா? வெறும் தண்ணீரில் இதை கலந்து குடிப்பதால் உங்கள் உடல் எடை ஒரு மாதத்தில் 4 கிலோ அளவிற்கு குறையும்.

 

இயற்கை முறையான இந்த வழிமுறையை பயன்படுத்தி எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்றும் வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

1. ஒரு கைப்பிடி புதினா இலை

2. ஒரு துண்டு இஞ்சி

3. எலுமிச்சை பழ ஜூஸ் இரண்டு ஸ்பூன்

செய்முறை;

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.

2. அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

3. பின் அதில் புதினா இலைகளை எடுத்து சிறியதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

4. பின் சிறு துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணிரில் சேர்த்து கொள்ளவும்.

5. பிறகு எலுமிச்சை ஜுஸ் 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

6. சுவைக்காக வேண்டுமெனில் உப்பு சேர்த்து கொள்ளலாம்.

7. நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். நன்கு ஊரட்டும்.

பின் இதை காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம். எப்பொழுது வேணடுமானாலும் அருந்துங்கள் இதில் உள்ள அனைத்து பொருட்களும் உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது.

மேலும் புதினா வாய் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சி தருகிறது. இஞ்சி உடலில் உள்ள நசுக்களை வெளியேற்றுகிறது.

தொடர்ந்து இதை குடித்து வாருங்கள். எடை குறைந்து உங்கள் உடல் சிக்கென்று மாறிவிடும்.