DRINKING MILK: நீங்கள் குடிக்கின்ற பால் தூய்மையானதா? இதை ஜஸ்ட் 30 செகண்ட்ஸ்ல கண்டறியலாம்!!

Photo of author

By Rupa

DRINKING MILK: நீங்கள் குடிக்கின்ற பால் தூய்மையானதா? இதை ஜஸ்ட் 30 செகண்ட்ஸ்ல கண்டறியலாம்!!

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்து பானமாக இருக்கிறது.பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின் பி,டி,சி,இரும்பு சத்துக்கள் அதிகளவில் அடங்கியிருக்கிறது.

நம் நாட்டில் பசும் பால்,எருமை பாலை மக்கள் அதிகம் விரும்பி அருந்துகின்றனர்.தமிழக அரசும் ஆவின் நிறுவனம் மூலம் பாலின் தரத்தை பிரித்து விற்பனை செய்து வருகிறது.அது மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் பாக்கெட் பாலை விற்பனை செய்து வருகிறது.

ஆனால் நாம் வாங்கும் பால் தூய்மையானதா? என்று பெரும்பாலானோர் அதன் தன்மையை சோதிப்பதில்லை.பாக்கெட் பாலை வாங்கி வந்த உடன் காய்ச்சி குடிக்காமல் அதை சற்று பரிசோதிக்க வேண்டும்.

நம் குழந்தைகளுக்கு இந்த பாலை தான் கொடுக்கின்றோம்.எனவே இந்த வேலையை சிரமம் பார்க்காமல் செய்யலாம்.

பாலின் தூய்மையை கண்டறிவது எப்படி?

நீங்கள் வாங்கி வந்த பாலில் நீர் கலக்கப்பட்டு இருக்கிறதா என்று கண்டறிய பாலில் சில சொட்டுகள் எடுத்து தாழ்வான அல்லது சாய்வான பொருளில் ஊற்றவும்.எவ்வாறு செய்யும் பொழுது பாலில் இருந்து நீர் போன்று வழிந்தோடினால் அதில் நீர் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

பாலில் சிறிது உப்பு சேர்த்தால் அதன் நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.ஒருவேளை நீல நிறத்தில் பால் மாறினால் அதில் மாவு பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

பாலை கையில் தொட்டு பார்க்கும் பொழுது நுரை போன்று வெளிப்பட்டால் அதில் சோப்பு அல்லது பெவிகால் போன்றவை கலக்கப்பட்டிருக்கலாம்.

பாலில் பெரும்பாலும் யூரியாவே கலக்கப்படுகிறது.இதை எவ்வாறு கண்டரியலாம் என்றால் பாலில் சிறிது சோயா பீன் பொடி சேர்க்கவும்.பின்னர் ஒரு காட்டன் பஞ்சை அதில் நினைக்கவும். அது சிவப்பு நிறத்தில் பாலில் யூரியா கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.