இந்த 1 டீ குடித்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து விடும்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

0
133

தமிழகத்தில் தற்பொழுது இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்த மழையால் குழந்தைகளுக்கு சளி,இருமல் தொற்று அதிகரித்து வருகிறது.டானிக்,மாத்திரை இல்லாமல் சளி பாதிப்பு குணமாக கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)சிற்றத்தை – சிறிதளவு

2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

3)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:

சிற்றத்தை மூலிகை நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய ஒரு பொருள்.இதை 25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த சிற்றத்தையில் இருந்து சிறிதளவு எடுத்து உரலில் போட்டு தட்டிக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி இடித்த சிற்றத்தையை போட்டு சில நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.

பிறகு இந்த சிற்றத்தை தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.சிற்றத்தை பானம் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

சிற்றத்தை காரத்தன்மை கொண்ட பொருள் என்பதால் அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து பருகலாம்.குழந்தைகளுக்கு சிற்றத்தை பானத்தை கொடுப்பதற்கு முன்னர் சிறிதளவு தேன் சேர்ப்பது நல்லது.

சிற்றத்தை பானத்தை குடித்த சில மணி நேரத்தில் நுரையீரலில் படிந்துள்ள சளி முழுமையாக வெளியேறிவிடும்.சிற்றத்தை பேரரத்தை என்று இரு வகை உள்ளது.எனவே கடையில் சரியாக பார்த்து வாங்குங்கள்.

Previous articleஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் ” Uber ” சேவை!!
Next articleயுகபாரதியின் வரிகள் மீது நம்பிக்கை கொண்ட விஜய் பட பாடல் ஜெயித்தது!! அதை மாடிஃபை செய்த ஜெயம் ரவி படமும் ஜெயித்தது!!