ஒரு வாரம் இந்த டானிக்கை குடித்து வந்தால் போதும் கல்லீரல் வீக்கம் குறைந்து கல்லீரலில் உள்ள அசுத்தங்கள் வெளியேறிவிடும். கல்லீரலின் பணி என்ன என்பது அனைவருக்கும் தெரிந்ததே கல்லீரல் செரிமானத்திற்கு பயன்படுகின்றது. கல்லீரல் வீக்கம் ஏன் ஏற்படுகிறது என்றால் தேவையற்ற உணவுப் பழக்கங்களால் மட்டுமே கல்லீரல் அசுத்தமடைகிறது. கல்லீரலில் உள்ள வீக்கம் குறைய கல்லீரல் நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்ய இந்த டானிக்கை எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. கீழா நெல்லிக் காயை பொடி
2. நிலவேம்பு பொடி
3. நாட்டு சக்கரை
செய்முறை:
1. முதலில் ஒரு இரும்பு கடாயில் எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.
3. இப்பொழுது ஒரு ஸ்பூன் கீழாநெல்லி பொடி, ஒரு ஸ்பூன் நிலவேம்பு பொடி இரண்டும் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. தண்ணீர் ஒரு கொதி வந்ததும் இரண்டு பொடியை போட்டு நன்றாக 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
5. கொதித்த பின் அடுப்பை அணைத்துவிட்டு காய்ச்சிய தண்ணீரை வடிகட்டிவிட்டு சக்கைகளை எரிந்து விட்டு மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து வடிகட்டிய தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
6. எந்த அளவு தண்ணீர் உள்ளதோ அந்த அளவு நாட்டுச் சர்க்கரையை கலக்கவும்.
7. ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
8. இது ஒரு பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
9. இதனை ஒவ்வொரு வேளையும் உணவு அருந்துவதற்கு அரை மணி நேரம் முன் இதனை சாப்பிட வேண்டும்.
10. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம்.
11. தொடர்ந்து இதை சாப்பிட்டு வரும்பொழுது கல்லீரலில் உள்ள வீக்கம் மற்றும் கசடுகள் நீங்கி கல்லீரல் அதிகப்படியான வேலையை செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.