சிறுநீரக பாதையில் தொற்றுக் கிருமிகள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் சமயத்தில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.சில நேரம் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீண்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்:-
1)நெருஞ்சி முள் – ஒரு தேக்கரண்டி
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
*வயல் ஓரங்களில்,சாலை ஓரங்களில் வளர்ந்து கிடக்கும் நெருஞ்சி செடியில் இருந்து நெருஞ்சில் முற்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நெருஞ்சி முள் பாக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்கள்.
*பிறகு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தேக்கரண்டி நெருஞ்சி முள்ளை அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள்.
*அடுத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
*பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.தண்ணீர் நன்கு சூடானதும் எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை பிழிந்து பருகுங்கள்.
*இதை ஒருவாரம் செய்து வந்தால் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுக் கிருமிகள் முழுமையாக அழிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி துண்டு – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
*ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு இஞ்சி சாறை அதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பருகினால் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் பூசணி துண்டுகள் – நான்கு
2)செம்பருத்தி இதழ் – 10
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
*முதலில் மஞ்சள் பூசணி துண்டுகளை விதை நீக்கிவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.
*அடுத்து ஒரு செம்பருத்தி பூவின் இதழை தண்ணீரில் சுத்தம் செய்து பூசணி துண்டுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகி வந்தால் சொட்டு சொட்டாக சிறுநீர் கழிக்கும் நிலை இனி ஏற்படாது.