Driving Licence Renewal: ஜஸ்ட் ஒன் கிளிக்.. ஓட்டுநர் உரிமத்தை ஈஸியா பண்ணிடலாம்!!

0
184
Driving License Renewal: Just one click.. Driving license can be done easily!!
Driving License Renewal: Just one click.. Driving license can be done easily!!

Driving Licence Renewal: ஜஸ்ட் ஒன் கிளிக்.. ஓட்டுநர் உரிமத்தை ஈஸியா பண்ணிடலாம்!!

இந்தியாவில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலை கடமைமைப்பை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.பொதுவாக 18 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் வாகனங்களை இயக்குவது மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறாதவர்களால் தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது.

இதன் காரணமாக நம் நாட்டில் வானம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதியாக இருக்கிறது.அதேபோல் உங்கள் ஒருவர் உரிமம் சில வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதினால் அவை காலாவதியாவதற்குள் புதுப்பித்து கொள்வது நல்லது.

ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசென்ஸ்-ஐ புதுப்பிப்பது எப்படி?

படி 01:

முதலில் RTO-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான பரிவாஹன் போரட்டலுக்குள் செல்ல வேண்டும்.

படி 02:

பின்னர் சர்வீசஸ் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் “Driving Licence Services” என்பதை கிளிக் செய்து “தமிழ்நாடு” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

படி 03:

அடுத்து “Apply for DL Renewal” என்பதைத் தேர்வு செய்து “Continue ” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 04:

பின்னர் உங்கள் Driving Licence நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.இதற்கு அடுத்து கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாவை என்டர் செய்து “Get DL Details” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 05:

பிறகு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து “proceed” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 06:

அதன் பின்னர் ” DL Renewal” சேவையை கிளிக் செய்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

படி 07:

பிறகு கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றி “Submit” என்பதைக் கிளிக் செய்தால் எண்னுடன் ஒப்புகை ரசீது அனுப்பப்படும்.இதை பதிவிறக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்க வேண்டும்.பிறகு உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் தபால் வழியாக உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.