எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். அடுத்தடுத்து எந்தெந்த அமைச்சர்கள் டார்கெட்டில் உள்ளனர் என்ற வாரே அதிமுக பரபரப்பில் உள்ளது.
மேலும் அமலாக்க துறையினர் சோதனை செய்த அமைச்சர்கள் மீது வழக்கு பதிவும் செய்துள்ளனர். அந்த வழக்குகளை எவ்வாறு ரத்து செய்வது என்ற குழப்பத்திலும் எதிர்க்கட்சி இருக்கிறது. இந்நிலையில் வேறு வழியின்றி எதிர்க்கட்சி, ஆளும் கட்சியிடம் வழக்குகளை ரத்து செய்வதற்காக பேரம் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்துள்ளார். அதிமுக இரு பிரிவுகளாக உள்ள நிலையில் இவர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் எடப்பாடி குறித்தும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் முதலாவதாக, கருணாநிதியின் நினைவிடத்தை வைப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் புகழாரம் பேசினார். அது நடந்து முடிந்து எட்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். எடப்பாடியும் தான் கருணாநிதியை புகழ்ந்துள்ளார். ஏன் அதைப் பற்றி எல்லாம் பேசுவதில்லை?? கருணாநிதி பற்றி புகழாரம் சூட்டி பேச சொன்னதே எடப்பாடி பழனிசாமி தான்.
அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர் தங்கமணி தேவையின்றி ஓபிஎஸ் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இவ்வாறு சுமத்துவதற்கு ஒரே ஒரு காரணம் தான். தங்கமணியின் ராஜியமாக உள்ள நாமக்கல் மாவட்டத்தில், தற்பொழுது ஓபிஎஸ் பல நிர்வாகிகளை அமர்த்தி பொறுப்புகளை கொடுத்து வருகிறார். இவ்வாறு செய்வதால் தங்கமணியின் ராஜ்யமான நாமக்கல்லில் இவரது பெயருக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தான் தற்பொழுது ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டி வருகிறார்.
மேலும் பலமுறை நரேந்திர மோடி அவர்கள் ஓபிஎஸ் ஐ அழைத்து வரச் சொல்லியும் எடப்பாடி ஒருமுறை கூட அவரை அழைத்து செல்லவில்லை. அதேபோல, தற்பொழுது முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய பேரம் பேசி வருகின்றனர், அவர்களின் பட்டியலை நான் விரைவிலேயே வெளியிடுவேன் இவ்வாறு கூறியுள்ளார்.