முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட் !
புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் “மும்மொழி கொள்கை” இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம்,தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமிழக அரசு உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது!
மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!
என்று கூறியுள்ளார்.