கடமலைக்குண்டு காவல்துறை சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
கடமலைக்குண்டு ஹயக்கீரிவா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடமலைக்குண்டு காவல்துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி தலைமை வகித்தார்.
பள்ளி தாளாளர் குமரேசன், கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் சரவணன்,சார்பு ஆய்வாளர் அருண் பாண்டியன்,தனிப்பிரிவு போலீசார் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினர்.இறுதியில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன் நன்றியுரை கூறினார்.பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

