ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் போதை பொருட்கள்!! போதை மாபியாவின் புதிய அத்தியாயம்!!

0
60

தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை குறைக்க அரசு ஒரு வகையில் நடவடிக்கை எடுத்தால் போதை மாஃபியாவானது மற்றொரு விதத்தில் போதை பொருட்களை விற்பனை செய்கிறது. அவ்வாறாக தற்பொழுது ஆப்களின் மூலம் போதை பொருட்களை டோர் டெலிவரி செய்யக்கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாக போலீசார் தகவல்களில் தெரிவிக்கின்றனர்.

 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

 

2022 ஆம் ஆண்டு 10,665 போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.இதில் சம்பந்தப்பட்ட 19 வெளிநாட்டினர் உட்பட 14,934 பேரிடமிருந்து 28,383 கிலோ கஞ்சா, 63,848 மாத்திரைகள், 98 கிலோ மற்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களையும் தெரிவித்து இருக்கின்றனர்.

 

போலீஸ் தரப்பில் இவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படுவதால் போதைப்பொருள் மாபியா கூட்டமானது தங்களுடைய வழியினை மாற்றி அமைத்துள்ளனர். இதன் மூலம், ஆட்கள் மூலம் சப்ளை செய்வதற்குப் பதிலாக செல்போன் ‘ஆப்’கள் மூலமும் ஆன்லைன் மூலமும் போதைப் பொருள் ‘சேவை’யை தொடர்கிறார்கள்.

 

குறிப்பாக, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகளை போதை வஸ்தாக பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகரித்துள்ளதாகவும், இந்த வகை மாத்திரைகள் ஐ.டி ஊழியர்கள், பள்ளி மாணவ – மாணவியர் மத்தியில் அதிகமாக புழக்கத்தில் இருப்பது இன்னுமொரு அதிர்ச்சி. எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை பிரத்யேக செயலிகளே இவற்றை இருக்கும் இடத்துக்கே கொண்டு வந்து சேர்த்துவிடுவதால் இதில் சிக்கி இருப்பவர்களுக்கு இன்னும் எளிதாகி விடுகிறது என காவல்துறையின் அறிக்கையில் கூறியிருக்கின்றனர்.

 

இப்படி இந்த மாத்திரைகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்கள் கூடிய சீக்கிரமே பலவீனமடைந்து எந்த வேலைக்கும் லாயக்கற்றவர்களாகி விடுவார்கள்’ என்று அதிரவைக்கும் மருத்துவர்கள், ‘இது மூளைச்சாவு வரைக்கும் கொண்டுபோய்விடும் அபாயமும் இருக்கிறது’ என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆஸ்திரேலியா செய்வது கொஞ்சம் கூட சரியில்லை!! கோபத்தின் உச்சகட்டத்தில் கொந்தளித்த கவாஸ்கர்!!
Next articleகே எல் ராகுல் vs ரோஹித் சர்மா யார் தொடக்க வீரர்?? ஆஸ்திரேலியா திரும்பிய கம்பீர் எடுக்க போகும் முடிவு என்ன??