முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

Photo of author

By Parthipan K

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர்.

மனித உடலில் எசன்சியல், நான்எசன்சியல் என இரண்டு வகையான அமிலங்கள் உள்ளன, அதாவது மனித உடல் உற்பத்தி செய்யும் அமிலம் நான்எசன்சியல் உடலால் உற்பத்தி செய்ய இயலாத அமிலம் எசன்சியல். இவ்வாறு மனித உடலால் உற்பத்தி செய்ய இயலாத இந்த வகை அமிலங்கள் அசைவ உணவு மூலமே நமக்கு கிடைக்கும். ஆனால் இதைக் கொடுக்கும் ஒரேஒரு சைவ உணவு முருங்கைக் கீரை மட்டுமே.

தினமும் காலையில் ஒரு பிடி முருங்கைக் கீரையை மிளகு, சீரகம் சேர்த்து நெய்யில் வதக்கி உண்ண ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும் இதன் கீரையும் பூவும் குழந்தையின்மை பிரச்சினைக்கும் சிறந்த மருந்தாகும்.

இதில் அதிக அளவில் ‘புரதமும்’ ‘வைட்டமின் சி’ யும் உள்ளது. மேலும் இதன் இலைகள் காய்ந்து போனாலும் இதனுடைய ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும். இத்தனித்துவத்தை மற்ற கீரைகளில் காண முடியாது.

இனிமேலாவது மனைவிமார்களே வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உணவில் சேர்த்து குடும்பத்தைப் பராமரியுங்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்