நமது உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று இரும்பு.உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க,இரத்த உற்பத்தி அதிகரிக்க,உடல் சோர்வகமால் இருக்க இரும்புச்சத்து அவசியமான ஒன்று.இதனால் நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
பேரிச்சை,முருங்கை கீரை,கோழி ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இதில் முருங்கை கீரையில் தாதுக்கள்,ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.முருங்கை கீரையை கொண்டு சூப் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முருங்கை கீரை:
உடல் வலிமையை அதிகரிக்க முருங்கை கீரையை ஜூஸாக அரைத்து குடிக்கலாம்.முருங்கை கீரையை பொடித்து பானம் செய்து குடித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க முருங்கை கீரையை பொடித்து சாப்பிடலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முருங்கை கீரையை பொடித்து சாப்பிடலாம்.கண் பார்வை திறனை மேம்படுத்த முருங்கை கீரை உட்கொள்ளலாம்.
கோழி ஈரல்:
அசைவ உணவில் கோழி ஈரல் அதிக இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும்.இந்த கோழி ஈரலில் கால்சியம்,வைட்டமின் பி12,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
வாரம் ஒருமுறை கோழி ஈரலை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.முருங்கை கீரையைவிட கோழி ஈரலில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் கோழி கல்லீரல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய் இருப்பவர்கள் கோழி கல்லீரலை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சைவப் பிரியர்கள் முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.