குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!
புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் குடித்து விட்டு மது போதையில் பேருந்துகளை இயக்குவதால் அந்த பேருந்துகளில் பயத்துடன் பயணிக்கும் பயணிகளும் பொதுமக்களும் அரசிடம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோரிக்கை வைத்துள்ளனர்.
புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், அரியூர், தென்னல், கண்டமங்கலம், திருபுவனை, திருவண்டார் கோவில், திருக்கனூர், விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள், கார்கள், லாரிகள் தினந்தோறும் சென்று வருகின்றது. இந்த பகுதியில் செல்லும் வாகனங்களை சில ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஓட்டுகின்றனர். செல்போன்களில் பேசிகிட்டு வாகனத்தை ஓட்டுகின்றனர்.
புதுவை பேருந்து நிலையத்திற்கு வரும் சில தனியார் பேருந்தின் ஓட்டுநர்கள் புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடைகளுக்கு டீ குடிக்க செல்வது போல சென்று அது போதையை தரும் மதுபானங்களை வாங்கி குடித்துவிட்டு பழையபடி பேருந்துகளை ஓட்டுகின்றனர்.
இவ்வாறு மது போதையில் பேருந்துகைள ஓட்டும் பேருந்து ஓட்டுநர்களால் தேசிய நெடுஞ்சாலைகளில், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வாகனங்களை இயக்கும் பொழுதும் பேருந்தால் பயணிக்கும் பயணிகளுக்கும் சாலைகளில் நடக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகின்றது. பயணிகள் அனைவரும் பயத்துடனும் பீதியுடனும் பயணம் செய்கின்றனர்.
அதைப் போலவே மடுஙரை, மதகடிப்பட்டி, கன்னிக்கோவில், பாகூர், திருக்கனூர், காலப்பட்டு, லாஸ்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், கிளீனர்கள், டிக்கெட் செக்கர்கள், புரோக்கர்கள் என ஒரு சிலர் குடித்துவிட்டு பேருந்துகளை இயக்குகின்றனர். அது மட்டுமில்லாமல் பயணிகளை தரக்குறைவாக பேசுவது, தரக்குறைவாக நடத்துவது, நேரமில்லாததால் ஓட்டுநர்கள் தங்களின் இஷ்டத்திற்கு பேருந்தை ஒரு இடத்தில் நிறுத்தி பயணிகளை வலுகட்டாயமாக இறக்கி விடுவது, பயணிகளை மிரட்டுவது போன்று மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிராக பல நிகழ்வுகள் நடக்கின்றது.
இவர்களின் இந்த தவறான செயல்களால் முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் உரிய முறையில் சோதனை செய்து செக்கர்கள், புரோக்கர்கள், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் குடித்துள்ளார்களா இல்லையா என்று பரிசோதனை செய்து பார்த்து பின்பே பேருந்து உள்ளிட்ட வாகனங்களை இயக்க அனுமதி தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.