இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

0
230
#image_title

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!

 

கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்கள் இலவச மின்சாரமான 200 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுத்து தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.

 

இந்நிலையில் தேர்தலின் பொழுது காங்கிரஸ் கட்சி பல வாக்குறுதிகளை அறிவித்தது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற பல வாக்குறுதிகளை அறிவித்தது. இதையடுத்து இலவச மின்சாரமான 200 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு மக்கள் விண்ணப்பிக்களாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

 

முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்த 200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதற்கு சில கட்டுப்படுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

200 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தினால் அந்த 200 யூனிட் மின்சாரம் முழுவதற்கும் மக்கள் மின்சாரக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மக்கள் 200 யூனிட் அளவுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தினால் எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

 

200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதற்கு கடந்த ஜூன் 15ம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று அரசு ஏற்கனவே  அறிவித்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் இது தள்ளி வைக்கப்பட்டு இன்று முதல் அதாவது ஜூன் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

 

இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் சேவா சிந்து என்ற செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், பெங்களூரூ ஒன், கிராம ஒன் போன்ற மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

 

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற வேண்டும் என்றால் தங்களது மின் கட்டண விபரம் மற்றும் வாடகை வீட்யில் வசிப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.