வறட்டு இருமல் ஒரே நாளில் சரியாக! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

0
176

வறட்டு இருமல் ஒரே நாளில் சரியாக! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

தற்போது உள்ள சூழலில் சுற்றுப்புற மாசு மற்றும் காலநிலை மாற்றங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். தேனில் ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தேன் தொண்டையில் ஏற்பட்டுள்ள கரகரப்பை நீக்க உதவுகின்றது.

அந்த தேனுடன் ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூன் முழுவதுமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரட்டு இருமல் அதிகமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இதனை நாம் எடுத்துக் கொண்ட பிறகு அதன் பிறகு 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீர் பருக கூடாது. அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.மேலும் இவை பசியின்மையை தூண்டும். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது அரை டீஸ்பூன் அளவிற்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கும் நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை கொடுக்கலாம். இதனை வறட்டு இருமல் அதிகமாக இருக்கும் நேரத்தில் எடுத்துக் கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்பு உண்டாகும் நாள்!
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பயணம் உண்டாகும் நாள்!