சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!

Photo of author

By Rupa

சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!

Rupa

DSP congratulated the students who won the first prize in the Silamba competition!
சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!
 தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 17.07.2022 அன்று மாநில அளவில் நடைபெற்ற தனித்திறன் சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை போடி டிஎஸ்பி சுரேஷ் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து  பாராட்டுகளை தெரிவித்தார்.
 மாநில அளவில் நடைபெற்றபோட்டியில்  தனித்திறன் சிலம்பப் போட்டியில் ஐந்து வயதிற்குட்பட்ட மினி ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மினி சப் ஜூனியர் போட்டியில் ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பப் போட்டியில்  பவிசன், மற்றும் 10 வயதிற்குட்பட்ட சப் ஜூனியர் போட்டியில் ஒற்றைச் சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பத்தில் முதல் பரிசுகளை வென்ற அபராஜித் மாவலி, ஷர்மிதா, தன்ஷிகா ஸ்ரீ, அபிநவ், சாய் விஷ்ணு ஆகியோரின் திறமையை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.