சொத்துக்குவிப்பு வழக்கினால் கைதான சசிகலா தற்போது தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் வருகின்ற ஆண்டு ஜனவரி, 27ம் தேதி விடுவிக்கப்படுவார் என்று பெங்களூர், பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு விடுவிக்கப்பட வேண்டும் என்றால் ரூபாய் 10 கோடி தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இன்று காலை டிடிவி தினகரன் திடீரென்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே அதிமுக கட்சியில் உட்பூசல் நடந்து வரும் நிலையில் இவர் இப்படி ஒரு பயணம் மேற்கொண்டது அனைத்து கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சசிகலாவின் விடுதலை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. அதிமுகவில் சசிகலா மூலம் பலர் அந்தக் கட்சியில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அவர்கள் மறைமுகமாக சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.