மீண்டும் சி எஸ் கே அணியில் பாஃப் டு பிளஸ்சி… குஷியான ரசிகர்கள்!

0
276

மீண்டும் சி எஸ் கே அணியில் பாஃப் டு பிளஸ்சி… குஷியான ரசிகர்கள்!

இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கான தொடர்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவை ஐபிஎல் போல பிரபலமாகவோ அல்லது பணமழை கொட்டும் தொடர்களாகவோ இல்லை.

இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் இதுபோல ஒரு புதிய டி 20 தொடரை தொடங்கியுள்ளது. இதை பிரபலமாக்கும் விதமாக இந்த தொடரில் இடம்பெறும் அணிகள் அனைத்தையும் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்களே வாங்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியுள்ளது. இன்னும் முறையாக பெயரிடப்படாத CSA லீக், ஒரு தென்னாப்பிரிக்கர், ஒரே நாட்டைச் சேர்ந்த இருவருக்கு மேல் இல்லாத மூன்று வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு அன்கேப் பிளேயர் என்ற மேலாதிக்கக் கொள்கையின் கீழ் ஐந்து வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க் அணியில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பாஃப் டு பிளஸ்சியை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மீண்டும் சென்னை அணியில் டு பிளஸ்சி இணைந்துள்ளார்.

Previous articleசூட்டிங்கில் பல மணி நேரம் மழையில் நனைந்த இவர் ஓய்வு கூட எடுக்கவில்லை?. பிரத்தியேக பகிர்ந்த ரகசியம்?..
Next article“வீரர்களை நாட்டுக்காக விளையாடுங்கள் என கெஞ்ச முடியாது…” பயிற்சியாளர் உச்சகட்ட அதிருப்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here