வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்!

0
246

வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்!

வாத்து கறி மற்றும் முட்டை எளிதில் செரிக்கத் தக்கது. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. மேலும் அவித்த முட்டையை வெறுமையாக உண்டால் கூட, பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் கிடையாது. பச்சைமுட்டையைக் கூட ,மிக மிகக் குறைந்த அளவில், கடும் உடல் உழைப்பாளர்கள்,உடற்பயிற்சியாளர்கள் உட்கொள்ளலாம். இதில் கொழுப்புச்சத்து குறைவு.

தேவையான பொருட்கள் :

வாத்துக்கறி அரை கிலோ, எண்ணெய் தேவையான அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,தயிர் கால் டீஸ்பூன், இஞ்சி ,பூண்டு விழுது 1 டீஸ்பூன்,

மேலும் கறி தாளிக்க தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் 4, மிளகு அரை டீஸ்பூன், பூண்டு பல்  6, கறிவேப்பிலை 2 கொத்து சரியான அளவில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

விழுது அரைக்க தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் 2 ,மிளகு  6, தனியா தூள்  1 டீஸ்பூன், சீரகம்  அரை டீஸ்பூன் அனைத்தையும் சரியான அளவில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை : முதலில் வாத்துக் கறியை சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வாத்துக்கறி துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.

பின்னர் வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும்.

பிறகு வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் கறி துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பிறகு  மற்றொரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

அதன் பிறகு தாளித்தவற்றை வேக வைத்த வாத்துக் கறியுடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விட வேண்டும்.

 

 

Previous articleஎடை இழப்புக்கு அன்னாசிப்பழத்தைத் தவிர வேறெதையும் சாப்பிடவில்லையா?
Next articleபத்தாவது படித்திருந்தால் போதும் 35,000 சம்பளத்தில் அரசு வேலை! உடனே முந்துங்கள்!