பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!

0
117
Due to the impact of Cyclone Benjal, schools are closed until further notice!
Due to the impact of Cyclone Benjal, schools are closed until further notice!

விழுப்புரம் மாவட்டத்தில் “பெஞ்சல் புயல்” காரணமாக வரலாறு காணாத மழை அங்கு பொழிந்துள்ளது. இதனால் அங்கு ‘நிறைய வெள்ளச் சேதம்’ ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் ‘கடந்த 26 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது’.

“விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது”. வெள்ளத்தால் ‘சேதமடைந்த பள்ளிகளில் மறுசீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள்’ தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவ்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகள் விவரம் பின்வருமாறு :-

✓ திருவெண்ணை நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

✓ திருவெண்ணை நல்லூர் ஒன்றியம் சிறு மதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

✓ மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

✓ மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

✓ மரக்காணம் ஒன்றியம் நாரவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

✓ மரக்காணம் ஒன்றியம் காந்தாடு அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப்பள்ளி

✓ மரக்காணம் ஒன்றியம் மண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

✓ மரக்காணம் ஒன்றியம் கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி

பெஞ்சால் புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நிறைய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் விழுப்புரத்திலும் இந்த 7 பள்ளிகள் சேதமடைந்து இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை சீர் செய்யும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleரேஷன் அட்டைக்காரர்கள் E-KYC முடித்தால் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!! இதற்கான கால அவகாசம்!!
Next articleஇவரால் தான் நான் அதிக படத்தில் நடிக்கவில்லை!! விஜயை காரணமாக கூறும் நடிகர் விக்ராந்த்!!