திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு தனது கணவர் கவின் குமார், மாமனார் மாமியார் தான் காரணம் என்று தன்னுடைய தந்தைக்கு வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு விட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கல்யாண நேரத்தில் 500 பவுன் தங்கம் போடுவதாக சொல்லிவிட்டு 300 பவுன் தான் பெண் வீட்டார் போட்டுள்ளதால் அனுதினமும் கவின்குமாரின் குடும்பம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் கவின்குமாரின் குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரிதன்யாவின் உடலை அடக்கம் செய்யும் வரை தான் காவல்துறையினர் இந்த வழக்கில் ரொம்ப தீவிரமாக கவின்குமாரின் குடும்பத்தை கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், ரிதன்யாவை அடக்கம் செய்தபிறகு வழக்கை விசாரிக்காமல் தாமதம் செய்து வருவதாகவும் ரிதன்யாவின் தந்தை பரபரப்பு புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கவின்குமாரின் நெருங்கிய உறவினர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், திமுக கட்சியில் இருந்து தொடர்ந்து அழுத்தங்கள் வருவதால் எங்களால் இந்த வழக்கை முறையாக விசாரிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் சொல்வதாக ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பேட்டி கொடுத்துள்ளார். எல்லா பிரச்னைகளிலும் இப்படி ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மூக்கை நுழைத்து குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவது அண்மையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.