வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

0
187
#image_title

வெயிலால் 100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை.

மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்.

கோடை தொடங்கியதில் இருந்து வேலூரில் அதிகப்படியான வெயில் கொளுத்தி வருவதால் மதியம் வரை 100 நாள் வேலை செய்வதில் சிரமம் உள்ளது.

ஆகவே கோடை காலம் முடியும் வரைக்கும் 100 நாள் வேலை நேரத்தை குறைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Previous articleதொழிலாளர் நலத் திருத்தச் சட்டத்தில் உள்ள நலனைப் பாதிக்கும் பிரிவுகளை நீக்க முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் – விசிக திருமாவளவன் கோரிக்கை!
Next articleபொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!!