கன்னத்திலும் முகத்திலும் ஏற்படும் மங்கு!!! இந்த பிரச்சனையை தீர்க்க இந்த ஒரு பொருள் போதும்!!!

0
346
#image_title

கன்னத்திலும் முகத்திலும் ஏற்படும் மங்கு!!! இந்த பிரச்சனையை தீர்க்க இந்த ஒரு பொருள் போதும்!!!

நமது கன்னத்திலும், முகத்திலும் ஏற்படும் மங்கு பிரச்சனையை மறையச் செய்வதற்கு ஒரே ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தலாம். அது என்ன பொருள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

நம் கன்னத்திலும் முகத்திலும் ஏற்படும் மங்கு பிரச்சனை என்பது நமது முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றது. ஒரு சிலருக்கு மூக்கின் மேல் கருப்பு திட்டு போல இந்த மங்கு ஏற்படும். ஆண்களுக்கு மங்கு பிரச்சனை ஏற்படுவதை விட பெண்களுக்குத்தான் இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகின்றது.

பெண்களுக்கு அதிக அளவில் மங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகள் தான். மேலும் வெயிலில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் மங்கு பிரச்சனை ஏற்படும்.

இந்த மங்கு பிரச்சனையை ஜாதிக்காய் முற்றிலும் குணப்படுத்தும். ஜாதிக்காயில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இதை மங்கு பிரச்சனையை மறைய வைக்க எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

மங்கு பிரச்சனையை மறைய வைக்க ஜாதிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது?

மங்கு பிரச்சனையை மறைய வைக்க ஜாதிக்காயை வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் இதை மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும்.

அரைத்த இந்த ஜாதிக்காய் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ்டை முகத்தில் மங்கு இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும்.

பின்னர் தேய்த்த இடத்தில் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விடலாம். இதன் மூலமாக மங்கு பிரச்சனையை எளிமையாக குணப்படுத்தலாம்.

Previous articleமஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!!
Next articleமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே எவ்வாறு செய்வது!!? அதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!!