சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியம்பூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி 13ஆம் தேதி அன்று இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டு அம் மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவி இறந்து இரு தினங்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் பள்ளி சார்பில் எந்தவித தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதன் உச்சகட்டமாக ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டம் தீவிரமடைந்தது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் கலவரமாக வெடிக்க தொடங்கியது. அந்தக் கலவரத்தில் அப்பள்ளியில் உள்ள, பேருந்து முதல் அனைத்து பொருள்களும் தீ வைத்து கொளுத்தினர். அதை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கினர்.அவ்வாறு தீ வைத்து எரித்ததில் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டது. கலவரம் அதீத அளவில் வெடிக்க தொடங்கியதால் வரும் 31ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தியுள்ளனர்.
மேலும் அப்பள்ளியை தற்காலிகமாக மூடி உள்ளனர். இவ்வாறு இருக்கையில் அங்கு படித்து வரும் சக மாணவர்கள் சான்றிதழ் தீயில் எறிந்து நாசமாகிவிட்டது. இதனால் இதர பள்ளியில் சேர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். முதலில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் கல்வியை தொடர அங்குள்ள இதர அரசு அல்லது தனியார் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம்.
அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர் என்று கூறினார். மேலும் இந்த போராட்ட கலவரத்தில் பல மாணவர்களின் சான்றிதழ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வருவாய்த் துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அதேபோல மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி வழங்குவதது எளிது அதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.