இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (ஜூலை 7) இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.மேலும் அவரது ரசிகர்களும் இன்று ஆரவாரத்துடன் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோ அவர் எழுதிய நம்பர் 7 பாடலை தோனிக்கு பிறந்தநாள் பரிசாக நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த நம்பர் 7 பாடல் தோனி படைத்த சாதனைகளை விளக்கும் வகையில் பிராவோ எழுதியுள்ளார்.மேலும் இந்த பாடலில் வெற்றிகரமான கேப்டன்,3 பெரிய ஐசிசி கோப்பைகளை வென்று உள்ள ஒரே கேப்டன் உள்ளிட்ட பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.இந்த பாடலானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.இந்த பாடலுடன் ஹெலிகாப்டர் 7 புறப்பட்டது! தோனிக்கு மரியாதை செய்த டுவைன் பிராவோ. ஹேப்பி பர்த் டே தோனி என்று பதிவிடப்பட்டுள்ளது.
சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு வெளியிடப்பட்ட 7 என்ற பாடல் குறித்து முன்னதாக பிராவோ கூறியதாவது,நான் அவருக்கு எதாவது செய்ய விரும்புகிறேன்,தோனி அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில் இருக்கிறார்.அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக
இருந்தார்.மேலும் அவருக்கு நான் எதாவது செய்ய விரும்பினேன்.மேலும் நான் இந்த பாடலுக்கு 7 என்று பெயரிட்டேன்.இந்த எண் அவருக்கு சிறப்பான எண் என்று டுவைன் பிராவோ கூறியுள்ளார்.