குழந்தையுடன் தாய் பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உள்ள பின்னணி? பிரியங்காவின் கணவர் கைது

0
206

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலை அடுத்த ம.கொளக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர்.இவரது மனைவி பிரியங்கா என்பவர்.இந்த தம்பதியினரின் ஒரு வயது மகள் மீனலோசனி.கடந்த வாரம் பிரியங்கா தனது குழந்தையை தூக்கில் தொங்க விட்டு பிரியங்காவும் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பிரியாங்கவின் சகோதரர் பிரசாந்த் என்பவர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரில் பாலமுருகன் தனது சகோதரியை வரதட்சணை கேட்டு மிரட்டி கொடுமை செய்ததாகவும் அதன் காரணமாகவே தனது சகோதரி குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில்,பாலமுருகன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதும், மேலும் பிரியங்காவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற உண்மை தெரிய வந்தது.இதனை அடுத்து போலீசார் பாலமுருகணை கைது செய்தனர்.பிறகு நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்தனர்.

Previous articleமொட்டை மாடியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது நேர்ந்த சோகம்! 15 வயது சிறுமி பலி
Next articleதல தோனிக்கு பிறந்த நாள் பரிசு! பிராவோ வெளியிட்டுள்ள நம்பர் 7 பாடல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here