இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
101

தமிழகம் மற்றும் பிற வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது என்ற தவறான செய்தியை நம்பி, தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி சென்றுள்ளனர்.

ஆனால், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் அவர்களை இ-பாஸ் கட்டாயமாக தேவை என்றும் இல்லையேல் அனுமதிக்க முடியாது என்றும் கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 6 மாதங்களுக்குப் பிறகு கேரளாவிற்கு வேலைக்கு செல்லலாம் என்று வந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம், கேரளாவில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருப்பதாகவும், இதுவரை ரத்து செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருபவர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருவோர், கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வோர் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தவறான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Previous articleதபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleசிறு தவறுக்காக முதலாளியை கொன்ற தொழிலாளி