தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

0
71

தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் 73 சேவைகளை தொடங்க இந்திய தபால் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கிலும், மக்கள் அன்றாட பயன்பாட்டிற்காக வெளியே சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருப்பதனை அரசு கருத்தில் கொண்டு, இனி மின்சார கட்டணத்தை நிரப்புவது முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை உள்ள எல்லா சேவையும் தபால் நிலையத்தில் செயல்படுத்த இந்திய தபால் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியில் மின்சார கட்டணம் செலுத்துவது, பாஸ்போர்ட் விண்ணப்பம், முதியோர் ஓய்வு ஊதியம் ,காப்பீட்டு தொகை செலுத்துதல், விதவை ஓய்வூதியம் போன்ற பல்வேறு முக்கிய பணிகள் செய்ய இயலும் என தபால் நிலைய அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்தி தகவலின்படி ,ஒரு பொது சேவை மையத்தில் ஒரு கட்டமாக விரைவில் திறக்க மத்திய அரசு தயாராகி வருவதாகவும் ,மக்களின் வசதி தொடர்பான 73 பணிகளை ஒரே மையத்தில் செயல்படுத்துவதால் மக்கள் கூட்ட நெரிசலை தடுக்க இயலும் என்று கூறியுள்ளனர்.

PM பயிர் காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பவ யோஜனா, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ,மொபைல் மற்றும் டிஜிட்டல் ரீசார்ஜ், பாஸ்போர்ட், மின்சாரம் ,நீர், தொலைபேசி, எரிவாய்வு ஆகியவற்றிற்கு பணம் செலுத்துவதற்காக எல்லா சேவையும் செய்ய இயலும் என அறிக்கையில் தெரிவித்தது . இந்த சேவைக்காக பீகாரில் 300 மையங்களை திறக்க போவதாகவும் கூறப்படுகிறது. அதில் முதலாவதாக தலைநகர் பாட்னாவில் உள்ள சில தபால் நிலையங்களில் தொடங்க படுவதாகவும், அதே நேரத்தில் தபால்துறை தொடர்ந்து செயலில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தபால் நிலையங்களில் ரேஷன் முதல் மருந்து வரை அனைத்தையும் கொண்டு செல்லும் பணியில் தபால் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் மருந்துகளை வாங்குவதற்காக இனி வெளியே செல்ல தேவையில்லை. தபால்துறை நெட் மெட் மூலம் மருந்துகள் மற்றும் பிற வைத்த பொருட்களை முன்பதிவு செய்தால், தபால் மூலமாக நம் வீடு தேடி வரும் வசதியை மேற்க்கொள்ப்படுவதாக கூறியுள்ளனர். இதற்காக நாட்டின் 17 நகரங்களில் சிறப்பு அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K