இந்தியாவில் தீவிரவாதிகள் நுழைவதை தவிர்ப்பதற்காகவும் போலி பாஸ்போர்ட் களை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழையக் கூடியவர்களினை முழுவதுமாக தடுக்கவும் மத்திய அரசு முக்கியமான முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது.
அதன்படி, தற்பொழுது நடைமுறையில் இருக்கக்கூடிய பாஸ்போர்ட் முழுவதுமாக மாற்றி இ பாஸ்போர்ட் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் இவற்றை முழுக்க முழுக்க சீப் அடிப்படையிலான இ பாஸ்போர்ட்டுகளாக உருவாக்க இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ பாஸ்போர்ட்டுகள் இந்த மாதம் முதலே புழக்கத்திற்கு வந்து விடும் என்றும் இதன் மூலம் போலி பாஸ்போர்ட்டுகளை முழுவதுமாக தடுக்க முடியும் என்றும் பயண பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் குடியுரிமை செயல்முறைகளை நவீனமாக இந்த பாஸ்போர்ட் ஆனது உதவும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிப் பொருத்தப்பட்டு இருப்பதால் இந்த இ பாஸ்போர்ட்டை போலியாக உருவெடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இனி வரக்கூடிய காலங்களில் இந்தியாவிற்குள் ஒருவர் கூட போலி பாஸ்போர்ட் மூலமாக நுழைய முடியாத என்றும் இதனால் இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் சட்ட விரோதமாக நுழைப்பவர்களை முழுவதுமாக தடுத்துவிட முடியும் என்று மோடி அரசு தெரிவித்ததோடு இது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.