சொரியாசிஸ் என்பது நமது சருமத்தில் வரக் கூடிய ஒரு நோய் பாதிப்பாகும்.இது ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் ஏற்படக் கூடியது.இது சருமத்தை தவிர நகம்,தலை,உடலின் இதர பாகங்களையும் பாதிக்க கூடியதாக இருக்கிறது.குறிப்பாக முழங்கை,முழங்கால்,முதுகு ,உச்சந்தலை உள்ளிட்ட இடங்களில் சொரியாசிஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
சருமத்தில் அதிகப்படியான அரிப்பு,முடி கொட்டுதல்,தோல் வறட்சி,தோல் வெடிப்பு,விரல் நகங்களில் மாற்றம்,மூட்டு பகுதியில் அதிகப்படியான வலி,வீக்கம்,கடுமையான காய்ச்சல் அனைத்தும் சொரியாசிஸ் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது.நமது இந்தியாவில் மூன்று சதவீதம் பேர் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சொரியாசிஸ் ஏற்பட காரணம்:
1)மன அழுத்தம்
2)வறண்ட வானிலை
3)மது பழக்கம்
4)காயங்கள்
5)தொற்றுகள்
சொரியாசிஸ்க்கு தீர்வு:
சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.இரத்த பரிசோதனை,கல்லீரல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
சீரான உடற்பயிற்சி,சரும பராமரிப்பு,தோல்களை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற செயல்கள் மூலம் சொரியாசிஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
உடல் பருமன்,வளர்சிதை மாற்றம்,நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் சொரியாசிஸ் வரக் கூடும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.