மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! 

Photo of author

By Amutha

மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! 

இந்திய பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆனது அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரில் அருகில் தென்மேற்கு பகுதியில் நள்ளிரவு 12:53 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில்    தென்கிழக்கு பகுதியில் 126 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டு ஏற்பட்டிருப்பதாக  கண்டறியப்பட்டு இருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 5,9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதன் காரணமாக பீதியில் உறைந்த மக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பிலிருந்து 69 கிலோமீட்டர் அடிஆழத்தில்  உணரப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் கடும் பயத்தில் உள்ளனர். இருப்பினும் இந்த நில நடக்கத்தான் உயிரிழப்போ, பொருள்  இழப்போ, ஏற்படவில்லை.

தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது என்பதை தொடர் கதையாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜப்பான், இந்தியா, நேபாளம், உள்ளிட்ட பல நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்ச்சியான நிகழ்வாகி உள்ளது.

பூமி தட்டுகளில் ஏற்பட்ட அதிரடியான நகர்வினால் இந்த நிலநடுக்கமானது ஏற்படுகிறது. ஏற்கனவே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.