#Breaking: அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம்

Photo of author

By Anand

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கேயுள்ள பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் 75 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தற்போது உடனடியாக வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.