கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக உறுப்பினர் என் சண்முகம் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் திட்டம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்கள். கிழக்கு  கடற்கரை சாலையை கல்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உரிய அமைப்புகளுடன் நான்கு வழிச்சாலையாக அமைக்க திட்டம் உள்ளதா? அவ்வாறு திட்டம் இருப்பின் அதன் விவரங்கள், மாமல்லபுரம் முதல் கடலூர் வரையிலான நான்குவழிச் சாலை திட்டத்தின் முன்னேற்றங்கள், கிழக்கு கடற்கரை சாலைக்கான மொத்த திட்ட செலவுகள் பற்றி கேட்கப்பட்டிருந்தது.

இந்த கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கடற்கரை எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பாலங்கள் சுரங்கங்களுடன் பிரிக்கப்பட்ட நான்கு வழியாக அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்திலிருந்து கடலூர்  வரையில் கிழக்கு கடற்கரை சாலையும் விரிவுபடுத்தும் நிலை இருக்கின்றது.

மாமல்லபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இந்த கிழக்கு கடற்கரை சாலையை விரிவு படுத்துவதற்கு மொத்த திட்ட மதிப்பீடு செலவு 24 ஆயிரத்து 435 கோடி ஆகும். மேலும் இந்த திட்டப்பணி மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ தூர நான்கு வழி, முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கி.மீ  நான்கு வழி, மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 46 கி.மீ  நான்கு வழி.

புதுச்சேரி முதல் பூண்டியன்குப்பம் வரை 38 கி.மீ  நான்கு வழி, பூண்டியன்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை 56 கி.மீ  நான்கு வழி, சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 55 கி.மீ  நான்கு வழி, நாகப்பட்டினம் முதல் ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை 331 கிலோமீட்டர் வரை தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை 125 கிலோமீட்டர் வழியாக 8 பிரிவாக நடத்தப்பட இருக்கின்றது.

இதில் மாமல்லபுரம் முதல் முகையூர் வரையிலான 31 கிலோமீட்டர் நான்கு வழியை அடுத்த ஆண்டு மே மாதம் 11 ஆம்  தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரை 2.47 சதவீதம் அளவே பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முகையூர் முதல் மரக்காணம் வரையிலான 31 கிலோமீட்டர் நான்கு வழி பணிகளை  கடந்த மே மாதம் 11  தேதியன்று ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான 46 கிலோ மீட்டர் பணிக்கும் ஏழாம் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல் பாண்டியன் குப்பம் வரை 38 கிலோமீட்டர் பணிகளை இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அன்று முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 41.60 சதவீதம் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார்.