மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!

0
154
Action order issued by the central government! Corona peaked in these 6 states in India!
Action order issued by the central government! Corona peaked in these 6 states in India!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கி அந்த ஆண்டின் இறுதியில் முற்றிலும் குறைந்தது. அதன் பிறகு மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா எழுச்சி பெற தொடங்கியது. மேலும் ஜனவரி மாதத்தில் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் கடந்த மார்ச்  எட்டாம் தேதி வரை 2082 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பானது மார்ச் 15ஆம் தேதி 3௦64 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று  பரவாமல் இருப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் நேற்று கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K