முட்டையை உடைத்து பார்க்காமலேயே கலப்படம் உள்ளதா என்பதை ஈசியாக கண்டறியலாம்!!
நாம் உண்ணும் உணவில் அனைத்தும் கலப்படம் வந்துவிட்டது குறிப்பாக இந்த கோடையில் அதிகளவு விற்கப்படும் தர்பூசணி மாம்பழம் என அனைத்திலும் கலப்படம் இல்லாமல் விற்பதே இல்லை. இவ்வாறு கலப்படமுள்ள படங்களை உணவுத்துறையானது சமீபத்தில் அதிக அளவு கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாம் உண்ணும் அரிசி இறைச்சி வகைகள் என அனைத்திலும் கலப்படம் உருவாகிவிட்டது.
நமது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும் வண்ணங்கள் போன்றவற்றை உபயோக ஆரம்பித்து விட்டனர். அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் முட்டை பிளாஸ்டிக் அரிசி போன்றவை அதிகம் வந்துவிட்டது. அதில் முட்டையில் கலப்படம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
முட்டையில் கலப்படம் இருப்பதை கண்டுபிடிக்கும் முறை:
மொட்டையானது பல மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால் இது கெட்டுப் போகாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைத்து எடுத்து செல்கின்றனர்.
இந்த வெப்பநிலையானது சில முட்டைகளில் மாறும் பொழுது கெட்டுப்போக நேரிடும்.
இவ்வாறாக கெட்டுப் போவது இயற்கையான ஒன்றுதான்.
அதேபோல சில நேரங்களில் கோழிகளுக்கு கொடுக்கும் தீவனத்தினாலும் முட்டைகள் விரைவிலேயே கெடுவதுண்டு.
நமது போன் டார்ச் மீது முட்டையை வைக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கும் பொழுது முட்டையினுள் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் போல் காணப்படும்.
இது இயற்கையான சுவாச பாதை என்று கூறலாம்.
இதுவே பிளாஸ்டிக் முட்டையில் இவ்வாறு காணப்படாது அதுமட்டுமின்றி அதிலுள்ள மஞ்சள் கரம் அப்பட்டமாக வெளியே தெரியும்.