அசுர வேகத்தில் முடி வளர ஈஸியான முறையில் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை!!
பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது.தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை,உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல்,இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது.இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை.தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தயாரிப்பது மிகவும் சுலபம் அதே சமயம் கிடைக்கும் பலன் அதிகம்.
தேவையான பொருட்கள்:-
கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
மருதாணி -1 கைப்பிடி அளவு
பெரு நெல்லிக்காய் -3 (நறுக்கியது)
கற்றாழை -10 துண்டுகள்
ஊறவைத்த வெந்தயம் -1 டேபிள் ஸ்பூன்
செம்பருத்தி இதழ்கள் -20
சின்ன வெங்காயம் -10 (நறுக்கியது)
நல்லெண்ணெய் -1 லிட்டர்
தேங்காய் எண்ணெய் -1 லிட்டர்
மிளகு -10
செய்முறை:-
முதலில் ஒரு பெரிய கடாய் எடுத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பு பற்ற வைத்து அந்த கடாயை வைக்க வேண்டும்.பிறகு எண்ணெய்யில் மருதாணி,பெரு நெல்லிக்காய்,கற்றாழை உள்ளிட்ட அனைத்து பொருள்களின் சத்துக்களும் இறங்கி நன்கு நுரைத்து பொங்கி வரும் நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.இதையடுத்து மூலிகை எண்ணெய் ஆறிய பின்னர் அவற்றை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தடவிவர முடி கருமையாக மாறி தேவையான சத்துக்கள் கிடைத்து சில நாட்களில் அடர்த்தியாக வளர தொடங்கும்.