நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… முதல் முறையாக நியூசிலாந்தை வென்று சாதனை படைத்த யு.ஏ.இ!!

0
31

 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… முதல் முறையாக நியூசிலாந்தை வென்று சாதனை படைத்த யு.ஏ.இ…

 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்தை முதல் முறையாக சொந்த மண்ணில் தோற்கடித்து யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

 

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என்ற.கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இன்று நியூசிலாந்து மற்றும் யு.ஏ.இ அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி துபாயில் நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி யூ.ஏ.இ அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தது.

 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் போவெஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் சைப்ரட் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சாப்மென் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்த நீஷம் ரன் சேர்க்க தொடங்கினார்.

 

அரைசதம் அடித்த சாப்மென் 63 ரன்களுக்கு ஆட்டமிழக்க நீஷம் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்தது. யு.ஏ.இ அணியில் சிறப்பாக பந்துவீசி மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜவதுல்லா 2 விக்கெட்டுகளையும், அலி நசீர், ஜாஹூர் கான், முகமது ஃபராசுதீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

143 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய யு.ஏ.இ அணியில் தொடக்க வீரர் ஆர்யன்ஷ் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் முகமது வாசிம் சிறப்பாக விளையாடத் தொடங்கினார். முகமது வாசிம் அவருடன் சேர்ந்த விரித்ய அரவிந்த் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க மறுமுனையில் சிறப்பாக அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த முகமது வாசிம் 29 பந்துகளில் அரைசதம் அடித்து 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

 

பின்னர் களமிறங்கிய ஆசிப் கான்.அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 15.4 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து 144 ரன்கள் எடுத்து இரண்டாவது டி20 போட்டியில் யு.ஏ.இ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, மிட்செல் சான்ட்னர் ஆகியைர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசி மூன்று.முக்கிய பேட்ஸ்மேன்ஙளின் விக்கெட்டை எடுத்த அயான் அப்சல் கான் அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது.

 

இன்று(ஆகஸ்ட்19) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் வெற்றா பெற்ற யு.ஏ.இ அணி சாதனை படைத்துள்ளது. முதல் முறையாக யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து சாதனை படைத்துள்ளது.