தினமும் 100 கிராம் பொட்டுக்கடலை சாப்பிடுங்கள்!! நோயின்றி வாழுங்கள்!

Photo of author

By Divya

தினமும் 100 கிராம் பொட்டுக்கடலை சாப்பிடுங்கள்!! நோயின்றி வாழுங்கள்!

உங்களில் பலருக்கு பொட்டுக்கடலை சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.மொரு மொருவென்று இருப்பதால் இதை விரும்பி உண்ணும் நபர்கள் அதிகம்.ஆனால் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

100 கிராம் பொட்டுக்கடலையில் 18 கிராம் புரோட்டீன்,16 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.அது மட்டுமின்றி மாங்கனீஸ்,பாஸ்பரஸ்,காப்பர் போன்ற சத்துக்களும் அடங்கியிருக்கிறது.

தினமும் 100 கிராம் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்னெ?

1)மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிட்டு வருவதன் மூலம் உரிய தீர்வு கிடைக்கும்.

2)உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிட்டு வரலாம்.

3)பொட்டுக்கடலையில் மாங்கனீஸ்,பாஸ்பரஸ்,காப்பர் போன்ற சத்துக்கள் அடங்கி இருப்பதால் இதை உண்டு வருவதன் மூலம் இதய நோய் பாதிப்பை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும்.

4)செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

5)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பொட்டுக்கடலை சாப்பிட்டு வரலாம்.

6)தசைகள்,எலும்புகள் வலுப்பெற பொட்டுக்கடலை சாப்பிடலாம்.

7)மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உத்திரப்போக்கை சரி செய்ய பொட்டுக்கடலை சாப்பிடலாம்.

8)பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.