காலையில் வெறும் வயிற்றில் 2 பல் பூண்டு சாப்பிட்டு வர உடலில் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்!!
மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டை நாம் உணவில் சேர்த்து கொள்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
உணவு நிபுணர்கள் கூற்றின்படி தினசரி பூண்டு உட்கொண்டு வந்தால் அது இதயத்தை காக்கும் கவசமாக இருக்கும், மேலும் இதய நாள நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பிரச்னைகளை தீர்க்கும். நீங்கள் உடல் நலம் திடமாக வைத்து கொள்ள விரும்பினால், சர்க்கரை அளவை சீராக வைக்க விரும்பினால், நிச்சயம் நாள்தோறும் பூண்டு சாப்பிட மறக்க கூடாது.
நம் இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும், தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும், பூண்டில் அதிகமாக உள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடும்போது நல்ல சீரண சக்தியை கொடுக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு இது உதவுகிறது. பூண்டு உங்க உடலிலுள்ள ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
வயிற்றில் புழுக்கள் இருந்தால் தினமும் காலையில் ஒரு பூண்டு பச்சையாக சாப்பிட்டு வர குடலிலுள்ள புழுக்கள் வெளியேறுகிறது.
பூண்டு இதய நோயை குறைக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதயத்தில் சீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. ஜலதோஷத்தை போக்கும் குணம் பூண்டிற்கு உள்ளது. பூண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் பத்து பல் பூண்டு வெறும் வாணலியில் வதக்கி சாப்பிட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் பெருகும். தினமும் உணவில் பூண்டு சேர்த்து வந்தால் வாயுத்தொல்லை விலகும்.
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை அவசியம் தவிர்க்க வேண்டும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே அவர்கள் தவிர்க்க வேண்டும். அமில பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும்.