பொடுகு வர காரணம்!! ஒரே நாளில் பொடுகு நீங்க இதை செய்யுங்கள்!!

0
118
#image_title

பொடுகு வர காரணம்!! ஒரே நாளில் பொடுகு நீங்க இதை செய்யுங்கள்!!

தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது. தலைமுடியை நன்கு அலசாமல் இருப்பது, தலைமுடியை எண்ணெயை பசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது. தேவையற்ற கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துவது மற்றும் பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது என்று தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது.

எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

தேயிலை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவது, தேயிலை மர எண்ணெய். இது பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.

வேப்பிலையை கைப்பிடி அளவு எடுத்து பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.

இதில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி தலையில் உள்ள பொடுகை நீக்கி ஆரோக்கியமான முடி வளர்ச்சி பெறுங்கள்.

 

author avatar
Selvarani