ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிடுங்க 3 கிலோ தொப்பையை குறைங்க! 

0
183

ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிடுங்க 3 கிலோ தொப்பையை குறைங்க! 

இன்றைய சூழலில் அவசரமான உலகில் தொப்பையை குறைக்க நிறைய பேரால் உடற்பயிற்சி செய்ய இயலாது. சரியான உணவுப் பழக்கத்தையும் கடைபிடிக்க இயலாது.  நாம் பார்க்கும் இந்த வீட்டு வைத்திய முறையை செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. எளிமையான முறையில் சீரகத் தண்ணீரை எடுத்து வந்தால் ஒரே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று கிலோ தொப்பை காணாமல் போகும்.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சீரகம் எடுத்துக் கொள்ளவும். சீரகம் நமது உடலில் சேர்ந்து இருக்கக்கூடிய கொழுப்பு மற்றும் சேரக்கூடிய கொழுப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது. நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும். இதனால் தினமும் சீரகத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது நமது தொப்பை கணிசமான அளவில் குறைவதை நம்மால் காண இயலும்.

மேலும் ரத்த சோகையை போக்கும். மாரடைப்பு வருவதை தவிர்க்கும். செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் ஞாபக சக்தியை மேம்படுத்தும்.

சீரகத்தில் ஒரு 150ml  தண்ணீர் ஊற்றவும். பிறகு இதில் ஒரு சிறிய துண்டு பட்டை சேர்க்கவும். இதை இரவு 8 மணி அளவில்  தயார் செய்து ஊற விடவும். மறுநாள் காலை 6:00 மணி அளவில் எடுத்து சீரகத் தண்ணீரை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். இல்லையெனில் சிறிது வெந்நீர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து  காலை வெறும் வயிற்றில் பருகலாம்.

உங்களுக்கு அல்சர் பிரச்சனை இல்லை எனில் சீரகத் தண்ணீர் உடன் ஒரு கால் டம்ளர் அளவு வெந்நீர் மற்றும் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகலாம். இந்த முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் இதை தொடர்ந்து குடித்து வர ஒரு வாரத்தில் உங்களது தொப்பை கணிசமான அளவில் குறைவதை காணலாம்.

அதேபோல் சாதாரணமாக தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக இரவு ஊறவைத்த  5 ஸ்பூன் சீரகம் கலந்து தண்ணீரை வாட்டர் பாட்டிலில் தண்ணீருடன் கலந்து காலை, மதியம், இரவு,  என குடித்து வர நல்லதொரு பலன் கிடைக்கும்.

 

Previous articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleகிட்டப்பார்வை தூரப்பார்வையா?   கண் பார்வை குறைபாடுகள் 10 நாளில் சரியாக