மெலிந்த உடலின் எடையை அதிகரிக்க நெயில் இந்த பொடி ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடுங்கள்!!

Photo of author

By Rupa

பலர் தாங்கள் உணவு முறையில் கவனக் குறைவாக இருக்கின்றனர்.இதனால் உடல் எடை குறைந்து பலவீனமாவதோடு அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.எனவே உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்

1)கருப்பு கொண்டைக்கடலை
2)வெந்தயம்
3)நிலக்கடலை
4)பசு நெய்

செய்முறை விளக்கம்

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் 100 கிராம் கருப்பு கொண்டைக்கடலை போட்டு கருகிடாமல் வறுத்தெடுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அடுத்து 100 கிராம் நிலக்கடலையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.வாசனை வரும் வரை வறுத்து கொண்டை கடலை கொட்டி வைத்துள்ள தட்டில் இதை கொட்டி விடவும்.

பிறகு 25 கிராம் வெந்தயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.வெந்தயம் கருகினால் அதிக கசப்பாகிவிடும்.எனவே வாசனை வரும் வரை வறுத்து நன்கு ஆறவிடவும்.

இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.பிறகு இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:

முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.அதில் அரைத்த கொண்டை கடலை மிக்ஸ் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி பசு நெய் சேர்த்து கலக்கி சாப்பிடவும்.இந்த பேஸ்டை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை இயற்கையாவே அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

1)முந்திரி
2)நிலக்கடலை
3)பாதாம் பருப்பு

செய்முறை விளக்கம்

ஒரு கிண்ணத்தில் 50 கிராம் முந்திரி பருப்பு,50 கிராம் நிலக்கடலை மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை வாணலியில் போட்டு லேசாக நெய் விட்டு வறுக்க வேண்டும்.அதன் பின்னர் வறுத்த பொருட்களை ஒரு தட்டில் கொடி ஆறவிடவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை:

பாத்திரத்தில் 150 மில்லி பால் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அரைத்த பொடி தேவையான அளவு கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்கும்.