பண்டிகை காலங்களில் தான் இனிப்பு காரப் பலகாரங்கள் அதிகம் கிடைக்கிறது.இதனால் பலரும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள்.இதனால் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே இனிப்பு காரம் சாப்பிட்டால் எந்த பாதிப்புகளும் வரமால் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லேகியத்தை செய்து வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கரு மிளகு – ஐந்து
2)சுக்கு – சின்ன துண்டு
3)அதிமதுரம் – ஒன்று
4)திப்பிலி – இரண்டு
5)வால் மிளகு – ஐந்து
6)சித்தரத்தை – ஒன்று
7)உலர் பேரிச்சம் பழம் – இரண்டு
8)உலர் திராட்சை – ஐந்து
9)வெல்லம் – 50 கிராம்
10)நெய் – இரண்டு தேக்கரண்டி
11)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் காடாய் ஒன்றை அடுப்பில் வைத்து கரு மிளகு,வால் மிளகு,தோல் நீக்கிய சுக்கு,திப்பிலி,சித்தரத்தை,கொத்தமல்லி போன்ற பொருட்களை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஆறவிட்டு தனி தனி பாத்திரத்தில் இந்த பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
இதனுடன் விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சையை தனித்தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.
ஐந்து மணி நேரம் கழித்து ஊறவைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 50 கிராம் வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
மற்றொரு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து கரண்டி கொண்டு கைவிடாமல் வதக்கவும்.
பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை ஊற்றி கலந்துவிடவும்.கலவை நன்கு லேகியம் பதத்திற்கு வரும் வரை கிண்டி எடுக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து லேகியத்தை நன்கு ஆறவிடவும்.இந்த லேகியத்தை பண்டிகை காலங்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.