தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுங்கள்!! சகல நோய்களுக்கும் ஒரே தீர்வு!! 

0
49

தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுங்கள்!! சகல நோய்களுக்கும் ஒரே தீர்வு!!

கிராம்பு இந்திய சமையல் அறையில் நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்க்க மறவாதீர்கள் அல்லது கிராம்பு தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது.

கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர் வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது.

அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி : கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த் தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியம் : கல்லீரல் தான் உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும்.

பல்லுக்கு உறுதி : பல் வலியை தடுக்க கிராம்பு எண்ணெய் பொதுவாக பற்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளை உட்கொள்வது பல் வலியை குறைக்கவும் உதவும். கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. மேலும், உங்கள் பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும். வாய் கிருமிகளை நீக்கும் : காலையில் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். இது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இது உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு சிறந்தது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் தயார் செய்யலாம்.

 

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் : நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.

author avatar
Jeevitha