உடல் எடையை சட்டுனு குறைக்க பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்கள்!!

Photo of author

By Rupa

உடல் எடையை சட்டுனு குறைக்க பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்கள்!!

இப்பொழுது இருக்கும் நவீன காலகட்டத்தில் துரித உணவுகளை அதிகமாக உண்பதால் உடல் பருமனானது அதிகரித்து விடுகிறது. இந்த உடல் பருமனை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யவும் மக்கள் யோசிப்பதில்லை. ஆனால் நாம் உண்ணும் உணவு கொண்டு உடல் பருமனை எளிதாக குறைக்க முடியும்.

உடல் பருமனை எளிமையாக குறைப்பது எப்படி:

நாம் தினமும் சரி எடுத்துக் கொள்ளும் தண்ணீர் முதல் உணவு வரை அதில் சிறு சிறு மாற்றத்தை கொண்டு வந்தாலே உடல் பருமனை குறைக்க முடியும்.
அதுதான் நாம் பாரம்பரியமாக பின்பற்றி வரும் உணவே மருந்து கூட ஆகும்.
தினம்தோறும் குடிக்கும் தண்ணீரில் சீரகம் கலந்து பருகும் பொழுது கெட்ட கொழுப்புகள் வெளியேறி உடல் பருமன் குறையும்.
அதேபோல துரித உணவுகளை விட்டுவிட்டு காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உடல் பருமனை குறைக்கும் பேரிச்சம் பழம்:

பேரிச்சம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.குறிப்பாக ரத்தத்தின் அளவை அதிகரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஆனால் இது எவ்வாறு உடல் பருமனை குறைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே பேரிச்சம் பழத்தில் அதிக அளவு வைட்டமின்கள் கால்சியம் போன்றவை நிறைந்து தான் காணப்படும்.

இது உடல் பருமனை குறைக்க உதவும். அதிகளவு உடல் பருமன் இருக்கிறது என நினைப்பவர்கள் காலை அல்லது மாலை வேலைகளில் துரித உணவுகளுக்கு பதிலாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.அதுமட்டுமின்றி பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலில் எந்த ஒரு கொழுப்பும் சேராது.பேரிச்சம்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் பசி தூண்டுவது என்பதே இருக்காது.

இது பசியை கட்டுப்படுத்தக் கூடியது. அதேபோல மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் அதிலிருந்து விடுபட முடியும்.குடலில் செயல்பாடுகள் சீராக இருக்க இது மிகவும் உதவும்.இது செரிமானம் சீராக இருக்க உதவுவதால் உடல் எடை ஏறுவதில் இருந்து தங்களை பாதுகாக்கும்.

மேலும் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் நாள் முழுவதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவதற்கான ஆற்றலையும் அதிகரிக்கும். குறிப்பாக இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.