இதய நோயை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணமாக்க இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

இதய நோயை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணமாக்க இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

Divya

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதயம் சம்மந்தப்பட்ட நோய்களால் அவதியடைந்து வருகின்றனர்.இதயம் நம் உடலில் இருக்கின்ற மிக முக்கிய உள்ளுறுப்பாகும்.இதயத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இருதய அடைப்பு,இதய நரம்பு அடைப்பு,உயர் இரத்த அழுத்தம்,இரத்தத்தில் கொழுப்பு படிதல்,கார்டியாக் அரெஸ்ட்,ஹார்ட் அட்டாக் போன்றவை இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பாகும்.இந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

இதயம் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

1)கோதுமை,முழு தானிய உணவுகள்,ஓட்ஸ்,பழுப்பு அரிசி உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

2)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.பொரித்த மீன்களுக்கு பதில் குழம்பில் போட்ட மீன்களை சாப்பிட வேண்டும்.

3)முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட வேண்டும்.கொட்டை வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

4)பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்களை உட்கொள்ள வேண்டும்.சோயா உணவுகளை சாப்பிட வேண்டும்.அசைவ உணவுகளை வாரம் ஒருமுறை குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்:

1)அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

2)அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.வறுத்த உணவுகள்,முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

இதய நோய் பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள்:

1)மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

2)மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும்.புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.போதிய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.