உடல் வலிமையாக இருந்தால் மட்டுமே நோய் இன்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.உடல் வலிமை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடலுறவிற்கு தேவையான ஒன்றாகும்.நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உடலில் வலிமை இருக்க வேண்டும்.இல்லையென்றால் நிச்சயம் உடல் சோர்வடைந்துவிடும்.
பெண்களோ,ஆண்களோ தாங்கள் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.ஆண்களின் விந்து ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எளிதில் தங்கள் துணையை கருவுற வைக்க முடியும்.
தங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க ஆண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.நீங்கள் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவராக இருந்தால் அதை குறைத்துவிட்டு புழுங்கல் அரிசி சாதத்தை சாப்பிட தொடங்குங்கள்.இதனால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.அதேபோல் பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தாலும் உடல் வலிமை அடையும்.
தினமும் இரவு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட வேண்டும்.இதனால் உடல் சோர்வடைவது தடுக்கப்பட்டு எனர்ஜி கிடைக்கும்.நிலக்கடலையை வறுத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.வேக வைத்த வேர்க்கடலை சாப்பிட்டால் பாலுணர்வு அதிகரிக்கும்.
பசும் பாலில் ஒரு வெள்ளைப் பூண்டை நறுக்கி போட்டு சுண்டக் காய்ச்சி பருகி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும்.அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் தாம்பத்தியம் அனுபவிக்கலாம்.
பாதாம்,பிஸ்தா,முந்திரியை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் சோர்வின்றி உடலுறவில் ஈடுபடலாம்.