இரத்தத்தில் படிந்துள்ள அழுக்குகளை இயற்கையான முறையில் சுத்தப்படுத்த இந்த உணவை சாப்பிடுங்கள்!! 

Photo of author

By Rupa

இரத்தத்தில் படிந்துள்ள அழுக்குகளை இயற்கையான முறையில் சுத்தப்படுத்த இந்த உணவை சாப்பிடுங்கள்!! 

Rupa

Eat this food to cleanse the dirt in the blood in a natural way!!

உடல் சீராக இயங்க வேண்டுமென்றால் இரத்தம் தூய்மையாக இருக்க வேண்டும்.இரத்தத்தில் அழுக்கு,நச்சுக் கழிவுகள் இருந்தால் சுவாசக் கோளாறு,உடல் அசதி,வயிற்று பொருமல்,மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.உடலில் சுத்தமான இரத்த ஓட்டம் இருந்தால் மட்டுமேநோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழமுடியும்.

இரத்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்க மருந்து மாத்திரை உட்கொள்ள தேவையில்லை.இயற்கை முறையில் எளிமையாக இரத்தத்தை சுத்தம் செய்திடலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயற்கை உணவுகள்:

இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கி இரத்த உற்பத்தி அதிகரிக்க நாவல் பழ விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.

இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி உடலில் இரத்தம் ஊறும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பட எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி புதிய இரத்தம் பெருகும்.இதில் வைட்டமின்கள்,இரும்பு,மக்னீசியம்,போலேட் போன்ற தாதுக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.தினமும் பீட்ரூட்டின் சாறை குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

செம்பருத்தி இதழை சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.பூண்டு பற்கள் இரத்தத்தை சுத்திகரிக்கும் மருந்தாக செயல்படுகிறது.தினசரி உணவில் பூண்டு பற்களை சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் நச்சுக் கழிவுகள் சேர்வது தடுக்கப்படும்.

இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.ஆப்பிள் பழம் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.