தினமும் காலையில் எழுந்ததும் இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!! மலச்சிக்கல் வாயுத் தொல்லை நீங்கிவிடும்!!

0
135

தரம் இல்லாத உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.இன்று பலரும் உடலுக்கு பயன் தராத உணவுகளையே அதிகம் உட்கொண்டு வருகின்றனர்.இதனால் மலச்சிக்கல்,வாயுத்தொல்லை,வயிறு வலி,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரலாம்.

பப்பாளி பழத்தில் வைட்டமின்கள்,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

தேவைப்படும் பொருட்கள்:

1)பப்பாளி பழம் – ஒரு கப்
2)ஓமம் – கால் தேக்கரண்டி
3)சீரகம் – கால் தேக்கரண்டி
4)உப்பு – ஒரு பின்ச்

செய்முறை:

முதலில் ஒரு பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கால் தேக்கரண்டி மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து மிக்சர் அல்லது உரலில் கொட்டி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.இதை பப்பாளி பழத் துண்டுகள் மீது தூவி விடுங்கள்.

அடுத்து அதில் ஒரு பின்ச் அளவு உப்பு தூவி சாலட் போன்று சாப்பிடுங்கள்.இந்த பப்பாளி பழம் மலச்சிக்கலை போக்கும் மருந்தாக திகழ்கிறது.

சீரகம் செரிமானப் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.ஓமம் வாயுத் தொல்லைக்கு மருந்தாக திகழ்கிறது.இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம்,மலக் குடல் மற்றும் வயிறு உள்ளிட்டவை ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த பப்பாளி பழத்தை ஜூஸ் செய்து குடித்து வந்தால் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் சில மணி நேரத்தில் வெளியேறிவிடும்.

கடும் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழத் துண்டுகளை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிடலாம்.விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாக நாட்டு மருத்துவத்தில் திகழ்கிறது.

அதேபோல் பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.இதய ஆரோக்கியம் மேம்பட பப்பாளி பழத்தை தினமும் உட்கொண்டு வரலாம்.பப்பாளி பழத்தில் இருக்கின்ற அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வரலாம்.பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வை சம்மந்தபட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.சருமப் பிரச்சனைகளால் அவதியடைந்து வருபவர்கள் பப்பாளி பழத்தை உட்கொள்ளலாம்.

Previous articleலட்சங்களில் சம்பாதித்தாலும் பணக் கஷ்டம் மட்டும் தீர்ந்தபாடில்லையா? நீங்கள் செய்யும் இந்த தவறுகளே காரணம்!!
Next articleசெரிமான சிக்கலை தீர்க்கும் இந்த ஒரு கிழங்கை.. வேக வைத்தல் அல்லது பொடித்தல் முறையில் பயன்படுத்தலாம்!!